வாழ்வின் மூன்று படித்தரங்கள்

வாழ்வின் மூன்று படித்தரங்கள் வென்று வாழ்தல், வகுத்து வாழ்தல், வழங்கி வாழ்தல் என்று மூன்று படித்தரங்கள் உயிர்களின் வாழ்க்கையில் வாய்த்திருக்கின்றன. அவைகளுள் வென்று வாழ்தல் (competition) கடைத்தரமானது. விலங்குகளிடத்திலும் விலங்குகள் போன்ற மக்களிடத்தும் அத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். தங்களுக்குத் தருகிற மதிப்பை மற்ற உயிர்களுக்குத் தருவதில்லை. உலகில் உள்ளவைகளையும், உள்ளவர்களையும் ஏதேனும் ஒருவிதத்தில் மடக்கித் தங்கள் நலனுக்காகவும் சுகஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் அவர்களின் குறிக்கோள் ஆகும். அவரவர் வல்லமைக்கு ஏற்றவாறு பிறர்மீது ஆக்கிரமிப்பது அவர்களது இயல்பு. அதனால், … Continue reading வாழ்வின் மூன்று படித்தரங்கள்

Advertisements

வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில் சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன. திருவாசகத்தில் அமைந்துள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் போல் உயர்ந்திருக்கிறது. சீவனான இந்த ஜீவாத்மாக்கள் அனைத்தும் … Continue reading வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ********************************* பைபிள் பல பயனுள்ள போதனைகளை மனிதகுலத்துக்கு அறிவிக்கிறது. இதோ, படியுங்கள். * வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம்; கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை. * மனிதர்கள் தங்களுக்கு மேற்பட்ட வேறொருவரை குறிப்பிட்டுக் கூறி சத்தியம் செய்கிறார்கள். எவ்விதமான பிரச்னையையும் முடிப்பதற்கு சத்தியம் செய்வதே உறுதுணையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், ஒரு ரோமத்தையேனும் வெள்ளையாகவோ, கறுப்பாகவோ உங்களால் மாற்றமுடியாது.ஆகவே எதற்காகவும் சத்தியம் செய்ய வேண்டாம். … Continue reading கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?

💵ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.😳😳😳 அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.🚶🚶🚶 அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.💍👑💍 ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள்🌅, 630 வானவில் காட்சிகள்🌈. ஆயிரக்கணக்கான பூக்கள்🌺🌻💐🌸, பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன்☺☺ மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.😔😔😔 இந்த சிறுவன்  … Continue reading நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?

What is Maturity of Mind ? மன முதிர்ச்சி என்றால் என்ன?

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*  *What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட … Continue reading What is Maturity of Mind ? மன முதிர்ச்சி என்றால் என்ன?

பட்டினத்தடிகளின் சில பாடல்கள்

பட்டினத்தடிகளின் சில பாடல்கள் **************************************************** கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால் எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே! பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால் செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே! பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; … Continue reading பட்டினத்தடிகளின் சில பாடல்கள்

பொய்யும் பயமும்

பொய்யும் பயமும் சாதாரணமாக ஒரு தப்புச் செய்தபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே அந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது, பொய் சொல்லவேண்டியதாகிறது. அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி … Continue reading பொய்யும் பயமும்