நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை

"வீணாக்காதீர்கள்..’’ உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காக சென்றார். ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்துவிட்டன. நம் இந்தியர் பில் கேட்டார்.சிறிது நேரத்தில் பரிமாறியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார். பில்லை பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. … Continue reading நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை

Advertisements

சும்மா இருக்கும் அம்மா

(வாட்சப்பில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.) "வீட்ல சும்மா தான இருக்க" எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. " நீ சும்மா தான மா இருக்க.. இது செஞ்சி குடுத்திடு மா..." 'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு. வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க. அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன். இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம். மாலை கணவரும், … Continue reading சும்மா இருக்கும் அம்மா

இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ' என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார். கால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு … Continue reading இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து … Continue reading கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

யாருடைய கைகள்

ராணுவ வீரர்.... ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன்... அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை … Continue reading யாருடைய கைகள்

தாயற்றோரின் தாய்

தாயற்றோரின் தாய் *********************** தாயே நீவந் தாயே எந்நாட்டில் தாயே தாயே என்று புலம்பி யழும் தாயில் லாமகனுக்கும் மகளுக்கும் தாயாக நீ வந்தாய் அன்னை தெரசாவே அன்னை தொலைந்தவர்க்கும் அன்னை தொலைத்தவர்க்கும் அன்னையென வந்தாயே அன்ன மெவக் கீவதற்கு இரத்தம் கசியும் உடல் நித்தம் வறளும் உயிர் தத்தெ டுக்க யாருமின்றி தவித்த வேளைதனில் எம் தந்தை மனம் இரங்கித் தவித்த எமைக் காட்டி இவர்தாம் உம் பிள்ளை என- நீ தத்தெடுத்த வேளைதனில் தாயைப் … Continue reading தாயற்றோரின் தாய்

சரியான நவக்கிரக பரிகாரங்கள்

மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையின்படி:  பலதீபிகை குறிப்பிடும் பரிகாரம் வித்யாசமானது. நவகிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்த கிரகங்களை ஸ்தோத்ரபாராயணம் மந்த்ரஜபம் ஹோமம் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளால் திருப்தி செய்வித்து உபாசித்தல் என்பது ஒருவழி. மற்றொரு வழி அந்தந்த கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றி கௌரவித்து மகிழ்தல் என்பதாகும். மனிதநேய அடிப்படையில் அமைந்துள்ள இந்த வழி மிகவும் சுலபமாகவும், திருஷ்ட (கண்ணுக்குத் தெரியும்) பலன்களையும், அதிருஷ்ட (கண்ணுக்குத் தெரியாத) பலன்களையும் விரைவாகப் பெற்றுத் தருகிறது. இதன் படி, தந்தைக்குரிய … Continue reading சரியான நவக்கிரக பரிகாரங்கள்