இறைசக்தியும் நம் சக்தியும் – 22

இந்த வலைப்பக்கத்தில் உள்ள சில பிரார்த்தனைகள்: சமய நூற்கள்(103) சைவ சித்தாந்த சாத்திரங்கள்(29) திருமந்திரம்(7) திருவருட்பா(18) திருவாசகம்(7) தேவாரம்(24) திருஞானசம்பந்தர் தேவாரம் – முதல் திருமுறை(2) பகவத் கீதை சுருக்க உரை — ஜயதயால் கோயந்தகா(18) தெய்வத் துதிகள் (ஸ்லோகங்கள்)(289) ஆஞ்சநேயர்(13) ஐயப்பன்(3) கருடாழ்வார்(1) காயத்ரி(9) கிராம தெய்வங்கள்(4) கிருஷ்ணர்(5) சப்த கன்னியர்(10) சிவன் ஸ்தோத்ரங்கள்(57) பலன் தரும் பதிகங்கள் – (சிவபெருமான்)(30) சுப்ரமணியர்(17) துர்கா(12) தேவி, பராசக்தி(28) நவக்ரஹங்கள் தசதிக்பாலகர்கள்(11) மஹாவிஷ்ணு(10) ரங்கநாதர்(1) ராமர்(9) லக்ஷ்மி(11) … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 22

Advertisements

இறைசக்தியும் நம் சக்தியும் – 21

தமிழில் சில வேத மந்திரங்கள் வேதத்தில் உள்ள சில மந்திரங்கள் மதத்தை மீறியவை, அவற்றை யாரும் தன் மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லலாம். சில உதாரணங்கள்: உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!   இறைவா, நீ ஆன்மசக்தியாக இருக்கிறாய், எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய். நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஒழுக்க … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 21

இறைசக்தியும் நம் சக்தியும் – 20

எல்லா மொழியிலும் பிரார்த்தனை நூல்கள் தமிழில் என்று கொள்வோமானால், நிறைய பிரார்த்தனை நூல்கள் இருக்கின்றன. கடவுளை நேரடியாகக் கண்ட சிவனடியார்கள், நாயன்மார்கள், அம்பிகை பக்தர்கள், முருக பக்தர்கள், ஆழ்வார்கள், அருட்பிரகாச வள்ளலார் இவர்கள் அருளியுள்ள எல்லா நூல்களுமே மிகச் சக்திவாய்ந்த அருமையான பிரார்த்தனைகளே. தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, குமரகுருபரர் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், வள்ளலாரின் திருஅருட்பா, போன்றவை. சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள், ஸஹஸ்ரநாமங்கள், சௌந்தர்யலஹரி, சிவான்ந்த … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 20

இறைசக்தியும் நம் சக்தியும் – 19

பிரார்த்தனையின் சக்தி மந்திரங்கள், பிரார்த்தனைகள் இவற்றுக்குச் சக்தியுள்ளதா அல்லது சொல்பவரின் மனக்கற்பனையால் சக்தி கிடைப்பதாகத் தோன்றுகிறதா என்பதைப்பற்றி உலகெங்கும் ஆயிரக்கணக்கில் சோதனைகள் கைதேர்ந்த அல்லோபதி மருத்துவர்களாலும், பிரபலமான விஞ்ஞானிகளாலும் செய்யப் பட்டுள்ளன. புத்தகங்களில் மட்டும் முன்னர் கிடைத்த இத்தகவல்கள் தற்கால அறிவியில் முன்னேற்றமான இணையத்தில் தேடினால் நொடிப்பொழுதில் கிடைக்கும். அவற்றின்படி முழு உலகமும் பிரார்த்தனையின் சக்தியை ஒப்புக்கொள்கின்றன. மனிதன் என்பவன் ஐம்புலன்களுள் அடங்கிவிட மாட்டான், அவனது இதயமும் மூளையும் ஐம்புலனுக்கு அப்பால் உள்ள ஒரு அதிர்வுநிலையைத் தொடர்புகொள்ள … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 19

இறைசக்தியும் நம் சக்தியும் – 18

சில பிரார்த்தனைகள்: பிரார்த்தனைகளைப் பற்றி எழுதத் தொடங்கினால் அது பல முழு புத்தகங்கள் அளவுக்கு உள்ளன. கீழ்க்கண்ட நூல்களில் உள்ள செய்யுள்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறந்த பிரார்த்தனைகளே. பல மொழிகளிலும் பிரார்த்தனைகள் உண்டு. எந்த மொழியாய் இருந்தாலும் சொந்த மொழியில் இருப்பது மிக நல்ல பயனைத் தரும். குடும்ப வழக்கங்களின் பொருட்டு சிலர் அயல்மொழியில் உள்ள பிரார்த்தனைகளைப் படித்துப் பிரார்த்திப்பது உண்டு. ஆயினும் அவற்றின் பொருளை மனதில் உணர்ந்து சொல்ல வேண்டுமாயின் அத்தகைய நூல்களுக்கு நமக்குத் தெரிந்த … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 18

இறைசக்தியும் நம் சக்தியும் – 17

அன்பே எல்லாம் என் வாழ்வில் நான் கற்றுக் கொண்டது  அன்பே எல்லாம் என்பதைத்தான். அன்பினால்தான் இந்த உலகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையாகவும், சிறு பிராயத்திலும், நமக்கு நம் பெற்றோர், நம் ஆசிரியர், நம் உற்றோர் ஆகியோர் அளித்த அன்பான அணுகுமுறையால்தான் நாம் வளர்ந்துள்ளோம். அவ்வாறு அன்பு செலுத்தும்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் அளவில்லாதது என்பதை நாம் பிறரிடம் அன்பு செலுத்தும்போதுதான் உணரமுடியும். அந்த அன்புதான் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து இதமான ஒரு வருடலாக, மிகுந்த வெப்பத்தில் வாடும்போது எங்கிருந்தோ … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 17

இறைசக்தியும் நம் சக்தியும் – 16

தன்னம்பிக்கையே முதல் கடவுள்   என் தந்தை எனக்கு இதைப் பற்றிப் போதித்தவை: தன்னம்பிக்கை என்பதே நமக்கு முதல் கடவுள் என்றும், நம் மதத்தின் கடவுள் அடுத்தபடிதான். தன்னம்பிக்கையின்றி, நம்பிக்கையின்றி எந்தப்பிரார்த்தனையும் நிறைவேறாது. வெறும் பிரார்த்தனை மட்டும் காரியங்களைச் சாதிக்கப் போதாது. தன்னம்பிக்கையுடன் செய்யும் முயற்சிதான் வெற்றிகொடுக்கும். நாம் மனம் தளரும்போது, அச்சமுறும்போது, தன்னம்பிக்கை பலமிழக்கும்போது நம்மைவிட மிக மிக மிக உயர்ந்த எல்லாம் வல்ல சக்தியான அந்த இறைவனை வேண்டினால், நமக்குத் தேவையான நம்சக்திக்கும் மீறிய … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 16

இறைசக்தியும் நம் சக்தியும் – 15

மதத்தால் மனிதரில் வேற்றுமை பாராட்டக் கூடாது மேலும் என் இளம்பிராயத்தில், என் வீட்டிற்கு வரும் என் தந்தையின் நண்பர்கள் எல்லா மதத்தினரும் ஆவர். எனக்குத் தெரிந்து இரு கிறிஸ்தவர்களும், இரு முகம்மதியர்களும், மூன்று இந்துக்களும் அவருக்கு மிக நட்பாக இருந்தனர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ வந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நீண்ட நேரம் என் தந்தையுடன் உரையாடும் போது பேசப்படும் தர்க்கப்பொருள் பெரும்பாலான நேரங்களில், பிறர் மீது அன்பு வைத்து நாம் … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 15

இறைசக்தியும் நம் சக்தியும் – 14

21 நாள் ஜுரத்தைத் தீர்த்த அன்பு முன்னொரு சமயம் நான் நெல்லிக்குப்பத்தில் பணிபுரிந்தபோது, நான் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள் கழித்தும் சரியாகாத போது என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு கிறிஸ்தவ அன்பரும், அவருடன் ஊழியத்துக்குப் போகும் அவரது நண்பரொருவரும் என் வீட்டிற்கு வந்து என் அனுமதியுடன் தமிழில் கிறிஸ்துவிடம் பத்து நிமிட பிரார்த்தனை செய்ய, எனக்கு வெகு அதிகமாக வியர்வைப் பெருக்கு ஏற்பட்டு 24 நாளில் பல மருந்துகள் உட்கொண்டும் தீராத என் நோய் அப்போதே விலகிவிட்டது. பின்னாட்களில் … Continue reading இறைசக்தியும் நம் சக்தியும் – 14