உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி

உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி by ஆர்.ஷபிமுன்னா Courtesy: Tamil Hindu - சிந்தனைக் களம் / 2018-10-31 உத்தரபிரதேச மாநிலத்தில் காவல ராகப் பணியாற்றும் தந்தையின் தலைமை அதிகாரியாக ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள மகன் பணி யாற்றுகிறார். திரைப்படக்காட்சி போல் தன் அதிகாரி மகனுக்கு அன்றாடம் சல்யூட் அடித்து நெகிழ் கிறார் தந்தை. உ.பி.யின் தலைநகரான லக்னோவின் விபூதிகண்ட் காவல் நிலையத்தில் காவலராகப் பணி யாற்றி … Continue reading உ.பி.யில் காவலரின் தலைமை அதிகாரியானார் மகன்: திரைப்படக் காட்சியை போல் சல்யூட் அடித்து நெகிழ்ச்சி

Advertisements

மனதை விட்டு அகலாத மாமனிதர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

Dr.APJ.Abdul Kalam 1931 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இந்தியாவின் சாதனையாளர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி தொழில்நுட்ப வல்லுநர் மிகப்பெரிய பொறியியளாலர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை அனைத்து வயது மாணவர்களுக்கும் மிகச்சிறந்த … Continue reading மனதை விட்டு அகலாத மாமனிதர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. ``தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி … Continue reading தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி

எனக்கென ஒரு கடவுள்!

எனக்கென ஒரு கடவுள்! மானா பாஸ்கரன் http://tamil.thehindu.com/opinion/columns/article24385829.ece இவர் பங்காரய்யா. மடிப்பாக்கத்தில் காலணிக் கடை வைத்திருப்பவர். தலை குனிந்திருக்க, எதையாவது தைத்துக்கொண்டே இருக்கும் விரல்கள். கடை முழுக்க தானே தைத்த காலணிகளை மாட்டி வைத்திருப்பார். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் செருப்பு தைப்பதற்காகப் போனேன். தைத்துக் கொடுத்தவரிடம் ‘‘எவ்வளவு?” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன்? அடுத்த தடவை பெருசா கிழிஞ்சத எடுத்தா. இப்ப ஒண்ணும் வேணாம் போ’’ என்றார் வெற்றிலை - பாக்கு வாய் மணக்க. இரண்டு, … Continue reading எனக்கென ஒரு கடவுள்!

இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ' என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார். கால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு … Continue reading இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு

உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி

குழந்தைகளே பெரியோர்களின்ஆ சிரியர்கள் முதல் பூமிக்கோள உச்சி மாநாடு 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, செவெர்ன் குல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 12 வயது சிறுமி உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள் இன்னும் இவ்வுலகில் நம்மை வாட்டி எடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன. அப்பெண் அந்த உச்சி மாநாட்டில் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு … Continue reading உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி