பாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்

சமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. பாலியலில் உயர்வு தாழ்வு பாராட்டாத பண்பாட்டுச் சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள்அனுபவித்து வந்த விருப்ப வேட்டைக்கு அடிபணிய மறுக்கிறது. மாற்றத்தை ஏற்பவர்களையும் எதிர்கொள்பவர்களையும் அழைத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகில் தங்களுக்கு மூச்சு முட்டுவதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண்களின் விருப்ப அதிகார உலகில் வாழ, தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் உணர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். உடை நடை மட்டுமில்லாமல் பெண்கள் தங்களுக்கான உலகையும் தாங்களே வடிவமைத்துக் … Continue reading பாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்

Advertisements

முற்போக்கு அல்ல;பிற்போக்கு! – சா. பன்னீர்செல்வம், (தினமணி, 26.Oct.2018)

முற்போக்கு அல்ல;பிற்போக்கு! By சா. பன்னீர்செல்வம் | Published on : 26th October 2018 01:47 AM | தினமணி மனித இனத்தின் மாறுதல்களைப் பலவாறாகப் பட்டியலிடலாம். விலங்கு, பறவை போல ஒலியெழுப்பியவன், தமிழென்றும் ஆங்கிலமென்றும் ஆயிரமாயிரம் மொழி பேசுகிறான். சூரிய ஒளி கண்டு வியந்தவன், சூரியனுக்குச் சோதிடம் கூறுகிறான். இருளைக் கண்டஞ்சியவன், இருளை ஒளிமயமாக்குகிறான். இயற்கையில் கிடைத்தவற்றைப் பச்சையாக உண்டவன், பீட்சாவைக் கூசாமல் வாய்பிளந்து சாப்பிடுகிறான். மலைக்குகைகளில் பதுங்கியவன், வானத்திலும் வீடு கட்டுகிறான். காலால் … Continue reading முற்போக்கு அல்ல;பிற்போக்கு! – சா. பன்னீர்செல்வம், (தினமணி, 26.Oct.2018)

பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!

Courtesy: Dinamani Newspaper பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன? நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் … Continue reading பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!

எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

மறுபதிவு இக்கட்டுரை வாசிப்பது உங்கள் மன அமைதிக்குக் கேடு விளைவிக்கும். எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ??? குடியரசு நாட்டில் நாம் “குடி”மக்கள் "மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு" என்று விளம்பரத்துடன், மதுவை மக்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கும் வசதிக்காக, நம் அரசாங்கமே முனைந்து அதை வியாபாரம் செய்கிறது. அரசுக்கு உரிமையான எந்த தொழிற்சாலையையும், நிறுவனங்களையும் விட அதிக வேகத்துடன் வளர்ந்து வரும் இத்துறை நம் மக்களை உண்மையில் "குடி"மக்களாக மாற்றியிருக்கிறது. நலிந்த மக்களுக்கு சேவை செய்ய பெரும் நிதி திரட்ட … Continue reading எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

இலவச அழிப்பு – எதிர்காலம்

இலவச அழிப்பு: ********************* காலை ஏழு மணிக்கே மிக இருட்டிவிட்டது. இப்போதுதான் துணிகளை வாசலில் காயவைத்தேன். மீண்டும் நனையாமல் இருக்க துணிகளை எடுத்துவர, வாசல்பக்கம் சென்றேன். ஒரு பையன். பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். "அண்ணே இந்தப் பேப்பர் கட்டை மாடிப்படிக்குக் கீழே வச்சிட்டுப் போறேன். வந்து எடுத்துக்கிறேன்." என்றான். கீழே அமர்ந்து, கட்டைப் பிரித்தான். அது இப்பகுதியில் (மாம்பலம், சென்னை) போடப்படும் ஒரு இலவச வார பேப்பர். சிறு  விளம்பரங்களால் வரும் வருமானத்தை உன்னிட்டு 8 … Continue reading இலவச அழிப்பு – எதிர்காலம்

நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?

💵ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.😳😳😳 அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.🚶🚶🚶 அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.💍👑💍 ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள்🌅, 630 வானவில் காட்சிகள்🌈. ஆயிரக்கணக்கான பூக்கள்🌺🌻💐🌸, பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன்☺☺ மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.😔😔😔 இந்த சிறுவன்  … Continue reading நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?

கேட்க ஆளில்லை — ஒரு பருவத்தில் வரம் — ஒரு பருவத்தில் சாபம்

கேட்க ஆளில்லை -- ஒரு பருவத்தில் வரம் -- ஒரு பருவத்தில் சாபம். *************************** குடும்பம் என்பது மூன்று நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் இருந்த காலம் ஒன்றிருந்தது. சில குடும்பங்களில் அங்கத்தினரின் எண்ணிக்கை 100-ஐக்கூடத் தாண்டும். அப்போதும் எப்போதும் அக்குடும்பங்கள் தனிமனித வாழ்வுக்கு அரணாக இருந்தன. இந்த எண்ணிக்கை சுருங்க ஆரம்பித்து, 50 ஆகி, 20 ஆகி, 10 ஆகி, 5 ஆகி, 4 ஆகி, 3 ஆகி, 2 ஆகிப்போனதே! தனிமனிதச் சுதந்திரம் முற்றிலும் … Continue reading கேட்க ஆளில்லை — ஒரு பருவத்தில் வரம் — ஒரு பருவத்தில் சாபம்