கண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்

பழைய செய்திதான் ஆனால் என்றைக்கும் நல்ல செய்தி சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் … Continue reading கண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்

Advertisements

எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

#வாழ்க்கைப்_பாடம்... அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் … Continue reading எனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்

இப்படி ஒரு தெய்வம்

முகநூலில் கண்ட முத்தான பதிவு... அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` … Continue reading இப்படி ஒரு தெய்வம்

எதுவுமே மிச்சமில்லை — அப்படியா ?

மனப்போக்குகள் உண்மைகளைவிட மிகவும் முக்கியமானவை! . ஐம்பத்திரண்டு வயது நிறைந்த மனிதர் ஒருவர் என்னிடம் ஆலோசனை பெற வந்தார். அவர் மிகவும் மனம் தளர்ந்திருந்தார். அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்கு ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று அவர் கூறினார். தன் வாழ்நாளில் அவர் உருவாக்கியிருந்த அனைத்தும் பறிபோய்விட்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். “அனைத்துமா?” என்று நான் கேட்டேன். “ஆம், அனைத்தும் பறிபோய்விட்டது,” என்று அவர் மீண்டும் கூறினார். தனக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று மீண்டும் … Continue reading எதுவுமே மிச்சமில்லை — அப்படியா ?

படகில் ஓட்டை சொல்ல மறந்து போனேனே

பிரதிபலன் பாராது உதவுவோம் .!! படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் … Continue reading படகில் ஓட்டை சொல்ல மறந்து போனேனே

பிறவி முதல் மரணம் வரை விடாத காமம்

முகநூலில் திரு கணேஷ்குமார் பதிவு செய்த கவிதை பாவப்பட்ட பெண்ணே!! கழிப்பறையில் கவனம்...! குளியறையில் கவனம்...! படுக்கையறையில் கவனம்...! பள்ளியறையில் கவனம்...! அலுவலகறையில் கவனம்...! கோவில் கருவறையில் கவனம்...! பேருந்து பயணத்தில் கவனம்...! இரயில் பயணத்தில் கவனம்...! பாலூட்டும் அறையில் கவனம்...! மருத்துவறையிலும் கவனம்...! ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...! நீ பெண் என்று தெரிந்து கொண்டால் தாயின் கருவறையிலும் கவனமாக இரு, பெண்ணே நீ கடந்து போகும் பாதையை கவனிப்பாயா...? சில காம வெறிநாய்களின் கண்களை … Continue reading பிறவி முதல் மரணம் வரை விடாத காமம்

மாணவனைக் காத்த ஆசிரியர்கள்

உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்...! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது … Continue reading மாணவனைக் காத்த ஆசிரியர்கள்

அழகிய சிங்கர்

*ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.* 1). *மத்ஸ்ய,* 2). *கூர்ம,* 3). *வராஹ,* 4). *நரசிம்ம,* 5). *வாமன,* 6). *பரசுராம,* 7). *ஸ்ரீராம,* 8). *பலராம,* 9). *கிருஷ்ண,* 10). *கல்கி*... அவதாரங்களை, வரவழைத்தார். முதல் சுற்றில் .. *மத்ஸ்ய, கூர்ம, வராஹ* மூன்று அவதாரங்களும் முறையே .. *மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி … Continue reading அழகிய சிங்கர்

அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

☆ஆன்மிகவாதிகளுக்கான சிறப்பு பதிவு☆ ○"கடவுளை காண விலகி போ"○ ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ? நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . ○எங்கே போகிறாய் ?" ●கடவுளை காண போகிறேன் !" ○எங்கே ? " ●கோவிலில் !" ○அங்கே போய் ........" ●அவரை வழிபட … Continue reading அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?