நம் வாழ்வை ஆளும் அந்த ஐந்தில் ஒன்று மட்டும் நித்தியமானதல்ல

துன்பப்படும் பற்பல மனிதர்களுக்குள், ஒரு சிலரே தங்கள் நிலையைப் பற்றியும், தாங்கள் யாவர், இதுபோன்ற விரும்பத் தகாத சூழ்நிலையில் தாங்கள் வைக்கப்படக் காரணம் யாது, என்பன போன்றவற்றைப் பற்றியும் ஆராய்வார்கள். தனது துன்பத்தை வினவும் இந்நிலைக்கு எழுப்பப்படாவிடில், தனக்குத் துயர் வேண்டாம், துயருக்கெல்லாம் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உணராதவரை, ஒருவன் பக்குவமான மனிதன் என்று கருதப்படுவதில்லை. ஒருவன் மனதில் இவ்விதமான ஆராய்ச்சி எழும் நிலையிலேயே மனிதத் தன்மை துவங்குகிறது....... கடவுள் (பரமபுருஷன்), ஜீவன் (உயிர்வாழி), ப்ரக்ருதி … Continue reading நம் வாழ்வை ஆளும் அந்த ஐந்தில் ஒன்று மட்டும் நித்தியமானதல்ல

Advertisements

ஸ்ரீமத் பகவத்கீதை (18) — மோக்ஷ ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினெட்டாவது அத்தியாயம் –  மோக்ஷ ஸந்யாஸ யோகம் அர்ஜுனன் கேட்கிறார் – “நீண்ட புஜங்கள் உடையவரே! அந்தர்யாமியே! கேசியை வதைத்த வாசுதேவனே! ஸந்யாஸம், தியாகம் – இவை பற்றிய தத்துவங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.” ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ பண்டிதர்கள், விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் காம்ய கர்மங்களைத் துறத்தலை ஸந்யாஸம் என்று அறிகிறார்கள். மற்றும் சில அராய்ச்சியாளர்கள் கர்மங்கள் அனைத்தினுடைய பயனையும் துறத்தலையே … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (18) — மோக்ஷ ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (17) — சிரத்தாத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினேழாவது அத்தியாயம் –  சிரத்தாத்ரய விபாக யோகம் அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! எவர்கள் சாஸ்திர விதிமுறைகளை மீறி, சிரத்தையால் உந்தப்பட்டு, தெய்வங்களை வழிபடுகிறார்களோ, அவர்களுடைய நிலைதான் என்ன? சத்துவ குணமுடையதா? ரஜோ குணமுடையதா? அல்லது தமோகுணமுடையதா?” ஸ்ரீபகவான் சொல்கிறார் – “மனிதர்களுக்கு அறநெறி முறையின்றி இயல்பாக உண்டான அந்தச் சிரத்தை சத்துவ குணமுடையது, ரஜோ குணமுடையது, தமோ குணமுடையது என்று மூன்றுவிதமாகவே இருக்கிறது. அதனை, நீ … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (17) — சிரத்தாத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (16) – தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினாறாவது அத்தியாயம் –  தைவாஸுர ஸம்பத் விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – “முற்றிலும் அச்சம் நீங்கியவனாக இருத்தல்; அந்தக்கரணம் முற்றிலும் தூய்மை பெற்றிருத்தல்; தத்துவஞானம் பெறுவதற்காகத் தியான யோகத்தில் இடையறாது உறுதியாக நிலை பெற்றிருத்தல்; சாத்விகமான தானம்; புலனடக்கம்; பகவான், தேவதைகள், பெரியோர்கள் ஆகியோருக்குரிய பூஜை; அக்னிஹோத்ரம் முதலிய நற்கர்மங்களைக் கடைப்பிடித்தல்; வேதங்களைக் கற்றல்-கற்பித்தல்; பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்தல்; ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (16) – தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (15) – புருஷோத்தம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினைந்தாவது அத்தியாயம் –  புருஷோத்தம யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ஆதிபுருஷனான பரமேசுவரன் எதற்கு வேரோ, பிரம்மதேவன் எதற்கு முக்கிய நடுமரமோ (கீழ்க்கிளையோ), அந்தப் பிரபஞ்ச உருவமான அரசமரத்தை அழியாதது எனக் கூறுகிறார்கள். மேலும் எந்த அரசமரத்திற்கு வேதங்களே இலைகளோ, சம்சாரம் (பிரபஞ்சம்) என்ற அரசமரத்தை, எவர் வேருடன் சேர்த்துத் தத்துவரீதியாக அறிகிறாரோ, அவரே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார். அந்த சம்சாரம் என்ற அரசமரத்தினுடைய கிளைகள் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (15) – புருஷோத்தம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (14) – குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா பதினான்காவது அத்தியாயம் –  குணத்ரய விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறினார் – “எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான ஸித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும் மிகச் சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன். இந்த ஞானத்தையறிந்து பின்பற்றி, என்னுடைய ஸ்வரூபத்தை அடைந்துள்ளவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதில்லை; பிரளய … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (14) – குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (13) – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா பதின்மூன்றாவது அத்தியாயம் –  க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறினார் – “அர்ஜுனா! இந்த உடல் க்ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. இதை எவன் அறிகிறானோ, அவனை க்ஷேத்திரக்ஞன் என்று தத்துவமறிந்த ஞானிகள் கூறுகிறார்கள். அர்ஜுனா! நீ , எல்லா க்ஷேத்திரங்களிலும் உள்ள க்ஷேத்திரக்ஞன், அதாவது ஜீவாத்மாவும் நானே என்று தெரிந்துகொள். மேலும் க்ஷேத்திரத்தைப் பற்றியும், க்ஷேத்திரக்ஞனைப் பற்றியும், அதாவது விகாரத்தோடு கூடிய பிரகிருதியையும் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (13) – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்