முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்

முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம் முருகா என்றால், இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக … Continue reading முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்

Advertisements

எனக்கென ஒரு கடவுள்!

எனக்கென ஒரு கடவுள்! மானா பாஸ்கரன் http://tamil.thehindu.com/opinion/columns/article24385829.ece இவர் பங்காரய்யா. மடிப்பாக்கத்தில் காலணிக் கடை வைத்திருப்பவர். தலை குனிந்திருக்க, எதையாவது தைத்துக்கொண்டே இருக்கும் விரல்கள். கடை முழுக்க தானே தைத்த காலணிகளை மாட்டி வைத்திருப்பார். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் செருப்பு தைப்பதற்காகப் போனேன். தைத்துக் கொடுத்தவரிடம் ‘‘எவ்வளவு?” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன்? அடுத்த தடவை பெருசா கிழிஞ்சத எடுத்தா. இப்ப ஒண்ணும் வேணாம் போ’’ என்றார் வெற்றிலை - பாக்கு வாய் மணக்க. இரண்டு, … Continue reading எனக்கென ஒரு கடவுள்!

தேவியின் திருவடித் தியானம்

தேவியின் திருவடித் தியானம் தேவியின் திருவடித் தியானம் படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம். இப்போது இருக்கும்படியான … Continue reading தேவியின் திருவடித் தியானம்

கண்ணா உன்னைத் தேடுகிறேன்

கண்ணா உன்னைத் தேடுகிறேன் ************************************   அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம் பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை? நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது! யாரிடம் போய்ச் சொல்வது இதை! பூட்டிய கோயிலுக்குள் யாரும் … Continue reading கண்ணா உன்னைத் தேடுகிறேன்

வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில் சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன. திருவாசகத்தில் அமைந்துள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் போல் உயர்ந்திருக்கிறது. சீவனான இந்த ஜீவாத்மாக்கள் அனைத்தும் … Continue reading வினை முற்றுக்கு திருமுறைப் பாடல்கள்

REINCARNATION – நானும் என்னைப் படைத்த அவனும்

நானும் என்னைப் படைத்த அவனும் REINCARNATION The thirteenth-century Persian poet Jalal ad-Din ar-Rumi, known today simply as Rumi, the Poet, wrote one of the most beautiful statements of spiritual wisdom ever offered to humanity, a succinct declaration which places reincarnation in the framework of God-realisation and shows the way for people seeking enlightenment: I died a … Continue reading REINCARNATION – நானும் என்னைப் படைத்த அவனும்

எக்கடவுளும் காசு கேட்பதில்லை

எக்கடவுளும் காசு கேட்பதில்லை பிறரில் கடவுளைக் காணும் பேறு கிட்டாதவர்களே, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் கொச்சைபடுத்துகிறார்கள். பொருள் படைத்த பலரும் தாம் பொருள் சேர்த்த விதம் பற்றியோ அல்லது பொருள் சேர்க்க எண்ணியுள்ள வழிபற்றியோ கொண்டுள்ள அச்சம் மிகுதியால்தான், தமக்கு மிகவும் பிடித்த பொருளை அளித்தால் அக்கடவுள் மிகவும் மகிழ்ந்துவிடுவார் என்றெண்ணி அளிக்கின்றனர். எம்மதமாயினும் தம்மத நூல்களை சரியாகப் படித்திருப்பின், காசை உண்டியலில் இடுவது பாவத்தைத் தீர்க்காது என்பதையும், பிறரில் காணும் இறைவனை நேசிப்பதே உண்மையான … Continue reading எக்கடவுளும் காசு கேட்பதில்லை