See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8
See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta
See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc
See Part -4 of this title here: https://wp.me/p41QAT-1Te
அந்யதேவதா பக்தர்கள் ப்ரஹ்மத்தை அடைவதில்லை
ந்யாயமாய்ப் பார்ப்போமாகில், யஜ்ஞ ஸம்மக்ரியைகளனைத்தையும் புசிக்கிறவன், என்னைத் தவிர வேறொருவனுமில்லை. எல்லா யஜ்ஞங்களும் என்னிடற்றான் முடிவுபெறுகின்றன. இப்படி இருக்க, துர்புத்தியானவர்கள், என்னை ஒதுக்கி வைத்து, வேறு தெய்வங்களை ஆராதிக்கிறார்கள். பித்ருக்கள், தேவர்கள் ஆகிய இவர்களை உத்தேசித்து, ஜலதர்ப்பணம் கங்கையிலிருந்தே எடுபட்டு, கங்கையிலேயே விடுபடுவது போலும், எந்த தேவதைகளைப் பூசித்தாலும், அப்பூசை என்னுடையதாகவே ஏற்பட்டு, எனக்கே வந்து சேர்கிறது. ஆனால் அவர்கள் பாவம் மட்டும் வேறுபட்டதாய் இருப்பதால், அவர்கள் ஒருக்காலும் என்னை வந்தடைவதில்லை. மனஸில் எந்த தெய்வத்தை உத்தேசித்து அவர்கள் பஜனை செய்தார்களோ, அந்த தெய்வத்தையே அவர்கள் அடைகிறார்கள்.
க்ஷுத்ரதெய்வங்களை உபாஸிக்கிறவர்கள் க்ஷுத்ரதெய்வங்களே ஆகிறார்கள்
மநோவாக்காயங்களால் எவர்கள் எந்த தேவதைகளை பஜித்துவருவார்களோ, அவர்கள் சரீரத்தை விட்டுப் போகும் க்ஷணத்தில், அந்த தேவதையே ஆகிறார்கள். எவர்கள் பித்ருக்களை உத்தேசித்த வ்ரதாசரணங்களில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள், தங்கள் ஆயஸு முடிந்தபின் பித்ருத்வத்தை அடைகிறார்கள். க்ஷுத்ர தேவதைகளாகிய பூதபிசாசுகளே, எவர்களுக்கு உத்தமமான தெய்வங்களோ, எவர்கள் ஆபிசாரிகா நுஷ்டாநங்களை ஸதா அநுஷ்டித்து வருகிறார்களோ, அவர்களுடைய தேஹம் என்னும் திரை கிழிந்துபோகும்போது, அவர்கள் பூதங்களும் பிசாசுகளும் ஆகிறார்கள். அப்படி, அவரவர்கள், தங்கள் தங்கள் ஸங்கல்பத்துக்கு வசப்பட்டு, எந்தக் கர்மங்களைச் செய்துவந்தார்களோ, அந்தக் கர்மங்கள் அவர்களுக்கு அப்படியே பலிக்கிறது.
ஸர்வேச்வரனை பஜிப்பவர்கள் ஸர்வேச்வரனோடு ஒன்றுபட்டுப் போகிறார்கள்
எவர்கள் தங்கள் கண்ணைக் கொண்டு என்னையே பார்த்து, தங்கள் காதைக் கொண்டு என்னையே கேட்டு, தங்கள் மனஸால் என்னையே நினைத்து, தங்கள் வாக்கினால் என்னையே வர்ணித்து, தங்கள் எல்லா அவயவங்களாலும், எல்லா இடங்களிலும், என்னையே நமஸ்கரித்துக்கொண்டு, தாங்கள் செய்யும் தாநாதிகர்மங்களை என்னுடைய ப்ரீத்யர்த்தமாகவே செய்துகொண்டு, என் ஸ்வரூபத்தை யதாவத்தாக அறிவதற்காகவே, சாஸ்த்ராத்யயநங்கள் செய்துகொண்டு, வெளியும் புறமும் என்னுடைய அநுபவத்தால் ஸதா த்ருப்தி அடைந்தவர்களாய், என்னுடைய நன்மையை உத்தேசித்தே ஜீவித்துக்கொண்டு, தாங்கள் ஹரிக்குப் பெருமை உண்டாக்குவதற்காக இருக்கிறவர்கள் என்று அஹம்காரம் பாராட்டிக்கொண்டு, இந்த லோகத்திலுள்ள ஸர்வ வஸ்துக்களையும் ஒழித்துவிட்டு, என்னொருவனையே அடைய வேண்டும் என்று பேராசை பாராட்டிக்கொண்டு, என்னொருவன் விஷயமாய் காமவிகாரம் பூண்டு, என் ஒருவன் விஷயமாகவே ப்ரேமை பாரட்டிக்கொண்டு, என்னையே நினைத்து நினைத்து பைத்யம் கொண்டு, உலகிலுள்ள இதர வஸ்துக்களை மறந்து, என்னை ஸம்பூர்ணமாய் அறிவதையே சாஸ்த்ராப்யாஸமாகச் செய்துகொண்டு, என்னை எந்த மந்த்ரத்தால் அடையக் கூடுமோ, அந்த மந்த்ரத்தை இதரர்களுக்கு உபதேசித்துக் கொண்டு, இவ்விதம் தங்களுடைய தேஹத்தின் ஸ்வாபாவிக சேஷ்டைகளை யெல்லாம் என்னுடைய பஜநையாகச் செய்துகொண்டு இருப்பார்களோ, அவர்கள் மரணமடைவதற்கு முன்னமேயே முற்றிலும் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார்கள். என்னை இப்படி ஸர்வ விதத்தினாலும் அராதிக்கிறவர்களான இவர்கள், தங்கள் ஆயஸ்ஸென்னும் தீர்க்கமான பூஜையின் முடிவில், தங்கள் ஆத்மாவையே எனக்கு ஓர் உபசாரமாய் ஸமர்ப்பித்து விடுகிறார்கள், என்று சொல்லும்படியாய், என்னுடன் ஸாயுஜ்யமடைகிறார்கள்.
ப்ரஹ்மப்ராப்திக்கு ஆத்மநிவேதன மொன்றே ஸாதநம்
அர்ஜுநா என்னிடத்தில் ஆத்மாவை ஸமர்ப்பித்து விட்டாலல்லது, நான் ஸந்துஷ்டனா வதில்லை. னான் அதைத் தப்ப எந்த உபசாரத்தாலும் அடையப்படுகிறவன் அல்ல. எவன் தன் கல்வியின் பெருமையைத் தானே கொண்டாடிக்கொண்டு, என்னை அறிந்து விட்டதாகவும், தான் ப்ரஹ்மமாய் விட்டதாகவும் சொல்லிகொள்வானோ, அவன் என்னை அறியாதவனே என்று தெரிந்துகொள். அன்றியும் யஜ்ஞதாநாதிகள், தபஸ்ஸின் பெருமை முதலிய எல்லாம் ஒன்றுசேர்ந்தாலும், இந்த என் ஸ்வரூபப்ராப்தியின் விஷயத்தில், ஒரு சிறுதுரும்பினளவு கூட, மதிப்புப் பெறாமற் போகும்.
நன்றாய்க் கவனித்துப்பார். அறிவின் பெருமையால் வேதத்தை அதிகரித்திருப்பவன் எவன் ? வாசாலகனாய்ப் பேசும் ஸாமர்த்யத்தில் ஆதிசேஷணை விஞ்சினவன் எவன் ? அந்த ஆதிசேஷனும் என் படுக்கையின்கீழ் சிக்கிப்போய் திணறிப் போகிறான். மற்றொன்றாகிய வேதமும் பலவிதமாய் என்னை வர்ணித்து, பின்பு இத்தனையும் என்னுடைய வர்ணனை ஆகவில்லை, ஆகவில்லை யென்று ஒத்துக்கொண்டு, என்னுடைய ஸ்வரூபத்தை விட்டு தூர நிற்கிறது. பூர்ண ஞாநிகள் என்று சொல்லப்படும் ஸநகாதிகள், என்னுடைய ஸ்வரூபத்தை, தங்கள் மனஸில் நிறுத்தப் பார்த்து, வெறிபிடித்துப் போனார்கள். தபஸ்ஸின் பெருமையைக் கொண்டு மதிப்பு ஏற்படுத்தப் போனால், சூலபாணியாகிய பரமசிவன் பக்கத்தில் உட்காரத்தக்க யோக்யதை படைத்தவர்கள் எவர்கள் ? அந்தப் பரமசிவன் கூட கர்வத்தை விட்டு, என்னுடைய பாததீர்த்தத்தை தலையால் வஹிந்திருக்கிறான்.
ஸம்பன்னதையில் மஹாலக்ஷ்மிக்கு ஸரியானவர்கள் எவர்கள் ? அவள் வீட்டில் வேலைசெய்யும் தாஸிகளான ஸித்திகள், லக்ஷ்மிகள் என்றே சொல்லத் தக்கவர்களாய் இருப்பார்கள். அவர்கள் விளையாட்டுக்குக் கட்டும் ஒரு சிறு வீடு அமராவதியென்று பெயரிடப் படுமேயாகில், அதில் வாஸம் செய்யும் இந்த்ராதிகள், அவர்கள் விளையாட்டு பொம்மைகள் ஆகார்களா ? பின்பு அந்த சிறு விடு அவர்கள் மனஸுக்குப் பிடிக்காமற் போனதாய், அது அழிக்கப்படும்போது, இந்த்ரன் மிக்க எளிமையை அடைந்து, பிச்சைக் காரனாய் அலைகிறான். அந்த தாஸிகள் ஸாதாரணமான ஒரு செடியை கண்ணெடுத்துப் பார்த்தார்களே யானால் அது கல்பவ்ருக்ஷம் ஆகிறது.
மஹாலக்ஷ்மியின் வீட்டு வேலைக் காரிகளுக்கே இவ்வளவு பெருமை இருந்தால், அவர்களுக்கு எஜமானியாகிய மஹாலக்ஷ்மிக்கு எவ்வளவு பெருமை யிராது ? அவளுக்கே என்னுடைய ஸ்வரூபம் என்னும் ஊரில் ஒரு மதிப்பும் இல்லாமற் போய் அவள் தன்னுடைய ஸகல ஐச்வர்யத்தையும் ஆத்மாவையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, கர்வம் முற்றிலும் அற்றவளாய், எனக்கு சேவை செய்துகொண்டிருந்து, என் பாத ப்ரக்ஷாளனம் செய்வது என்னும் மஹா பாக்யத்தை அடையத்தக்க யோக்யதையை அடைந்தாள்.
ஆகையால் பெருமையை எல்லாம் தூர ஒழித்து வைத்து, கற்ற வித்யைகளை யெல்லாம் முற்றிலும் மறந்துபோய், ஜகத்துக்குள் மிக்கத் தாழ்மையை அடைந்த வஸ்துவுக்கும் தாழ்மை பாராட்டிக்கொண்டு, எவன் இருப்பானோ, அவனே என் ஸாமீப்யத்தை அடைவான். எந்த சூர்யனுக்கு முன்னால் சந்த்ரனே தேஜஸ் இழந்து போகிறானோ, அந்த ஸூர்யனுக்கு முன்னால் மின்மினுப் பூச்சிகளுக்கு என்ன வேலை ? எந்த என் ஸ்வரூபத்தையடைய, லக்ஷ்மியின் பெருமை செல்லாததாயும், பரமசிவனுடைய தபஸ்ஸு கூட யோக்யதையால் போதாததாயும் போகிறதோ, அந்த ஸ்வரூபத்தை அறிய ப்ரக்ருதியாற் கட்டுண்டு கிடக்கும் பைத்யங்கள் என்று சொல்லத்தக்க மற்ற அல்பர்களுக்கு, என்ன யோக்யதை உண்டு ? ஆகையால் சரீராபிமானம் முழுவதையும்விட்டு, ஸகலகுணங்களையும் ஐச்வர்யமதத்தையும் கொண்டு, எனக்கு த்ருஷ்டியாக சுற்றி எறிந்துவிட்டு, மிக்க தாழ்மை பூண்டு நின்றாற் றான் என்னை அடைய முடியும்.
தொடரும்.