ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

81.மலைபோன்ற நிதம்பம்

அக்னி ஸ்தம்பம்

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம்
நிதம் ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச                                       81

பார்வதியே ! மலையரசன் கனத்தையும் விஸ்தாரத்தையும் தன்னுடைய அடிவாரத்தின்றும் எடுத்து உன்னிடத்தில் கொடுத்துவிட்டார் போலும். அதனால்தான் பருத்தும் விசாலமாகவும் இருக்கிற உன்னுடைய இந்த (hip) நிதம்பத்தின் பின்புறம் பூமி முழுவதையும் மறைக்கிறது, அதை லேசாகவும் செய்துவிடுகிறது.

82.  யானையின் துதிக்கை போன்ற தொடை

ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககலீ காண்படலீம்
பாப்யாமுரூப்யா முயமபி நிர்ஜித்ய வதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி                                  82

பகவதி ! பார்வதி ! சிறந்த யானைகளின் துதிக்கைகள், பொன்வாழை மரங்கள் ஆகிய இவ்விரண்டையும் இரண்டு தொடைகளால் ஜயித்தும் சாஸ்திரத்தை அறிந்தவளே ! பதியாகிய பரமசிவனுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் முழங்கால் முட்டிகளால் இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டுகும்பங்களையும் ஜயித்தும் இருக்கிறாய்.

 83.  மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்

சதுரங்க சைனிய ஸ்தம்பனம்

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத
தக்ரே த்ருஶ்யந்தே ஶஶர பலா: பாயுலீ
நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா:                                  83

பார்வதி ! பஞ்சபாணனாகிய மன்மதன் ருத்திரனை ஜயிப்பதற்கு உன்னுடைய முழந்தாள்களை நிறைந்த அம்பறாத் தூணிகளாக செய்திருக்கிறான். ஆம், நிச்சயம், அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் இரண்டுபாதங்களுடைய நகங்களின் நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான பத்துப் பாணங்களின் இரும்புமுனைகள்தான் காணப்படுகின்றன.

84. உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்

பரகாயப்ரவேசம், ஜீவன்முக்தி

ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ மாத: ஶிரஸி யயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி:                              84

தாயே ! உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயைகூர்ந்து வைத்தருள்வாயாக. அவற்றிற்கு பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் பரமசிவனுடைய சடையில் இருக்கும் கங்கையாகிறது. அவற்றிற்கு பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கின்றது.

அம்பாளுடைய ஊடலைத்தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும்போது அவருடைய சடையில் இருக்கும் கங்கை பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது. – லக்ஷ்மீதரர்.

85.  பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்

பிசாச பய நிவிருத்தி

நமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா மீஶான: ப்ரமவன கங்கேலி தரவே                                         85

கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரகாசம் மிக்கதாகவும், உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள உன்னுடைய பாதங்கள் இவ்விரண்டிற்கும் நமஸ்கார வார்த்தையை சொல்லுகிறோம். அந்தப் பாதங்களால் உதைக்கப் படுவதை விரும்புகிற நந்தவனத்தில் உள்ள அசோக மரத்தினிடம் பசுபதியானவர் மிகவும் பொறாமைப் படுகிறார்.

கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது. அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை. “பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக” என்பது பழமொழி.

Jealous of the Kankeli : the Kankali is a tree which, according to tradition, when barren, blossoms only when kicked by the tender feet of women of highest class, known as Padmini-s.

86. பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி

பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்
லலாடே ர்த்தாரம் சரணகமலே தாயதி தே
சிராந்த: ஶல்யம் ஹனக்ருத முன்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா                                 86

உன் பிறந்தவீட்டைப்பற்றிய ஏளனத்தை விளையாட்டுக்காக செய்துவிட்டு பிறகு உன் ப்ரணயகோபத்தைக்கண்டு இன்னது செய்வதென்று தெரியாமல் வணங்கின பர்த்தாவின் நெற்றியில் உன்னுடைய பாதகமலங்கள் தட்டுப்படும் போது, நெற்றிக்கண் எரிப்பால் எரிக்கப்பட்டு, நெடுநாளாக நெஞ்சில் வைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை அடியோடு தீர்த்துக் கொள்பவனும் சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால் உன் பாதச் சிலம்புகளின் மூலம் ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழுப்பப் படுவதாயிற்று.

 87.  பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்

ஸர்ப்ப வச்யம்

ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ
நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ
வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம்                      87

தாயே ! தாமரையோ பனியில் கருகிப்போவது உனது திருவடித் தாமரைகளோ – பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை; தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது, உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்தபோதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை; தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை; — ஆகையால் தாமரையை உனது பாத கமலங்கள் ஜயிக்கின்றன. இதில் அதிசயம் என்ன இருக்கிறது ?

 88.  மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன்

துஷ்டமிருகங்களின் வச்யம்

பதம் தே கீர்த்தீனாம் ப்ரப மபம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
தாதாய ந்யஸ்தம் த்ருஷதி யமானேன மனஸா                                88

தேவியே ! உன்னுடைய பாதங்களின் முன்பாகம் நீ அடியார்களைக் காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு உறைவிடம். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது – கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு ஸாதுக்களாகிய கவிகளால் கடினமான ஆமையோட்டின் உவமை எப்படி கற்பிக்கப் பட்டதோ ? தயை நிறைந்த மனமுடைய பரமசிவனால் விவாக காலத்தில் அப்பாதங்கள் கைகளால் எடுத்து அம்மிக்கல்லின்மேல் எப்படித்தான் வைக்கப்பட்டனவோ ?

இந்தச்சுலோகம் சில பழையகாலப் புஸ்தகங்களில் காணப்படவில்லை என்று கைவல்யாசிரமர் கூறுகிறார்.

 89.  சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி

ஸகலரோக நிவிருத்தி

நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
ரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ                   89

சும்பநிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகையே ! துளிர்கள் ஆகிற கை நுனிகளால் ஸ்வர்க்க வாசிகளுக்கு விரும்பிய பலன்களை அளிக்கின்ற தேவ லோகத்தில் உள்ல கல்பகம் முதலிய விருக்ஷங்களை ஏழை எளியவர்களுக்கும் பரம மங்களமான செல்வத்தை எந்தச் சமயத்திலும் விரைவில் அளிக்கின்ற உனது பாதங்கள் நகங்களால் பரிகசிப்பவைபோல் இருக்கின்றன. எப்படிப்பட்ட நகங்களால் என்றால் – தேவஸ்திரீகளின் கைகளாகிற தாமரைகளை மூடிகொள்லச் செய்யும் சந்திரர்களைப் போன்ற நகங்களால். நகங்களின் காந்தி பரிகாசச் சிரிப்பு போல் இருக்கிறது.

90.  கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்

துர்மந்திரச் சேதனம்

ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்ம் ஸௌந்ர்ய ப்ரகர மகரந்ம் விகிரதி
தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்                                         90

ஏழை எளியவர்களுக்கு அவரவர்களின் விருப்பத்திற்கு இணங்க செல்வத்தை எப்போதும் அளிப்பதும், குறைவின்றி அளவுகடந்த அழகாகிய மகரந்தத்தை இறைப்பதும், கற்பகத்தின் பூங்கொத்தைப் போல் மங்கலவடிவாகியதும் ஆன உன்னுடைய இப்பாத கமலங்களில் புகுந்து உறைவதும், மனத்துடன் கூட இந்திரியங்கள் ஆகிற கால்களைக் கொண்டதுமான ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை என்னுடைய ஜீவன் அடையட்டும்.

 சில பாடங்களில் இச்சுலோகம் 92 ஆவதாகவும், இந்த இடத்தில் ‘கதாகாலே’ என்னும் 98 ஆவது சுலோகமும் கானப்படுகிறது. கைவல்யாசிரமர் பாட்த்தில் இச்சுலோகம் இல்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.