இறைசக்தியும் நம் சக்தியும் – 2

Mahabharata_KrishnaArjun_ISKON_Flikr_380x255

சிதறிப்போன சக்தி

அதனால் சுய நலமான சிந்தனைகள் ஓங்கி, எல்லாம் நானே, எல்லாம் எனக்கே என்பது போன்ற எண்ணங்கள் தோன்றி, எல்லாவற்றிலும் நாமே வெற்றிகொள்ள வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு, பிறரை நாம் நோக்கும் பார்வையில், ஏளனமும், பரிகாசமும், பொறாமையும் ஏற்படுபடுவதும், பிறர் இருக்கும் உன்னதத்திலிருந்து அவர்கள் கீழே விழுவதை விரும்புவதும், இவ்வாறு நிலைமாறியதால் சிலசமயம் அச்சமும், தான் வளர்வதற்கு உலகிலுள்ள எல்லோருமே காரணமாக இருக்கவேண்டும் என்ற விருப்பமும், அதற்கு ஏதுவாக இல்லாதவர்களிடம் கோபமும், மரியாதை யின்மையும், தான் முயற்சியால் அடையவேண்டியதை வேறு வகையால் தட்டிப்பறிக்கும் எண்ணமும்,  அழகான, பெருமையான எதையும் எவ்வழியிலும் தனதாக்கிக்கொள்ளும் வெறியும், ஏற்பட்டு இயற்கையில் நாம் பிறக்கும் போது இறைவன் நமக்கு கொடையளித்த அந்த இயல்பான இறை நிலையைத் தொலைத்து விட்டதால், நம் எண்ணங்களின் சீரிய சக்தி சிதறிப்போய் விட்டவர்களாய் ஆகிவிட்டோம்.

 

புறக்கணிக்கப்பட்ட அன்பு

அன்பே உலகம், அன்பே கடவுள், அன்பே இயற்கை என்பதை மறந்ததால் அந்த அன்பை உள்ளத்திலிருந்து, நாம் மற்றவர்களிடம் பழகுவதிலிருந்து, நம் குழந்தைகளை வளர்ப்பதிலிருந்து, நம் நண்பர்களிமும் பிறரிடமும் பழகுவதிலிருந்து தொலைத்து விட்டதனால், அதன் விளைவாக மன அமைதி, சந்தோஷம், நல்ல நட்பு, நல்ல உறவு எல்லாம் கெட்டுப்போய், அதன் விளைவாக உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, சமுதாய அமைதி, சமுதாய ஆரோக்கியம், சமுதாயப் பண்புகள் ஆகியவற்றையும் இழந்து விட்டோம். எல்லாவற்றிலும், எல்லோரிடமும், சில சமயங்களில் பெற்றோர் பிள்ளைகளிடமும், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், சகோதரன் சகோதரனிடமும், பிள்ளைகள் பெற்றோரிடமும், நாம் நண்பர்களிடமும், எல்லா நேரங்களிலும் எதிர்பார்ப்புக்களோடு, அந்த எதிர்பார்ப்புக்களே கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு மிக முக்கியமாகப் போய்விட, அடிப்படைத் தேவையான அன்பை புறக்கணித்து விட்டோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.