தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது – என் கவனம் சிதறுகிறது

மாணவர் சக்தி கேள்வி பதில் பகுதிஆசிரியர் சுவிர் (ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம், ஆவணிஆகஸ்ட் 2017 இதழில் இருந்து)

கேள்வி:

நான் என் தனி அறையில் படிக்கும்போது எனது வீட்டில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என் கவனம் சிதறுகிறது. நான் எவ்வளவு சொல்லியும் என் பெற்றோர் கேட்பதில்லை. நான் என்ன செய்வது?

—-

பதில்:

உன்னை உன் பெற்றோர் படிக்க வைத்து, பார்ட் டைம் ஜாப் எதற்கும் அனுப்பாமல், உனக்குத் தனியறையும் கொடுத்து நீ படிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நீயோ அவர்களின் பொழுதுபோக்கைப் பற்றி விமர்சிக்கிறாய். இது சரியாம்மா?

டாக்டர் அப்துல் கலாமின் கவிதையில் இருந்து ஒருபகுதி உனக்காகத் தருகிறேன். அவரது இளமைக் காலம் எப்படி இருந்தது தெரியுமா?

கதிரவன் உதிப்பதற்குப் பல மணி நேரம் முன்பே எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்

கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம் பாடம் கற்கச் செல்லவேண்டும்.

மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்.

மணல்குன்றுகள் ஏறி இறங்கிப் புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று நாளிதழ் கட்டு எடுத்து வந்து அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

அப்புறம் பள்ளிக்குச் செல்லவேண்டும்…

இந்தச் சிறுவனின் வேதனையெல்லாம், அன்னையே, நீ அடக்கமான வலிமையினால் மாற்றினாய்.”

என்று தாயைப் போற்றுகிறார் டாக்டர் கலாம்.

இப்போது உன்னையும் அன்று ராமேஸ்வரத்தில் வசதி வாய்ப்பு இல்லாமல் வளர்ந்து விஞ்ஞானியாய், குடியரசுத் தலைவராய் உயர்ந்த சிறுவன் கலாமையும் ஒப்பிடு… நீ எப்படி இன்னும் கூடுதலாகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பது புரியும். உன் படிப்பில் ஆர்வத்தைப் பெருக்கு; டி.வி.யின் சத்தம் உனக்குக் கேட்காது.

***

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.